தேடல் தொடங்கியதே..

Sunday 1 January 2012

தூய்மைக்கரை ஆகப் போகும் நம் கீழக்கரை - மீண்டும் நல்ல உள்ளங்களின் புதிய முயற்சி

 நம் கீழக்கரையில் குப்பை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வே கண்டுபிடிக்கப் படாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கின்ற இந்த வேலையில் புதிய முயற்சியாக, கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெரு முயற்சி மேற் கொண்டு  'எக்ஸ்னோரா' என்ற தொண்டு அமைப்பின் உதவியோடு திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை, பொது மக்கள் மத்தியில், குப்பைகள் பற்றிய விழிப்புணர்வு போன்ற சிறப்பான சேவைகளை, நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு செயல்படுத்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் இன்று (31.12.2011) மதியம் மேலத்தெரு சதக்கதுல்லா அப்பா வளாகத்தில் நடைபெற்றது.




இது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட நடுத்தெருவை சேர்ந்த நவாஸ்கான் அவர்கள் கூறும் போது, "இந்த நல்ல முயற்சியை மேற்கொண்டு உள்ள அனைத்து பொது நலவாதிகளுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர். அருண் ராய் அவர்கள் பேசும் போது கீழக்கரை நகராட்சியில் கடந்த 1964 ஆம் ஆண்டுக்கு பிறகு இது வரை துப்பரவு பணியாளர்களுடைய எண்ணிக்கை உயர்த்தப் படவில்லை. துப்பரவு பணியாளர்கள் 70 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டியது, தற்போது 32 ஆக மட்டுமே இருக்கிறது.  ஆனால் இந்த பணியாளர்களை அவ்வளவு சீக்கிரம் அரசு நியமிக்காது என்று தன் வருத்தத்தை தெரிவித்ததுடன் இந்த பணியை  தொண்டு நிறுவனங்கள் தான் கையில் எடுத்து செய்ய வேண்டும் என்றார்.

பொது மக்களின் வரிப் பணத்தில் திட்டங்கள் தீட்டும் நம் அரசாங்கம் ஏன் சீக்கிரம் நடவடிக்கை எடுக்காது? என்று தெரியவில்லை. 1964 ம் ஆண்டில் இருந்த அதே மக்கள் தொகையா இன்னும் இருக்கிறது? தொண்டு நிறுவனங்களும், பொது நலவாதிகளும் முயற்சிகள் மேற்கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும். இதில் சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் அவர்களும், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் அரசாங்க ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.", என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மனோகரன்


இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மனோகரன் அவர்கள் கூறும் போது, "ஒரு பக்கம் குப்பைகள் அள்ளிக்கொண்டு இருக்கிறோம். மற்ற்றொரு பக்கம், குப்பைகள் மலை போல் குவிந்து வருகிறது. காலையில் குப்பைகள் அள்ளி தெளித்த ப்ளீசிங் பவுடர் காய்வதுக்குள் மாலையில், இங்கு குப்பை அள்ளப்பட்டதா? என்று கூட தெரியாத அளவிற்கு குப்பைகள் குவிந்து விடுகிறது. இது போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொது மக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

எங்களுடைய துப்பரவு பணிகளில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசனும் இணைந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படி இருந்தும், துப்பரவு பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது. தற்போது எங்களுடன் எக்ஸ்னோரா அமைப்பினரும் சேர்ந்து பணியாற்ற இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளில் பொது மக்கள் குறைவாக கலந்து கொண்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு குப்பை இல்லாத கீழக்கரை நகரை உருவாக்க முயற்சிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருந்து குப்பைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு பெற வேண்டும். குப்பைக் கரை என்று கேலி சித்திரமாக்கப்பட்ட நம் கீழக்கரை, இந்த நல்ல உள்ளங்களின் புதிய முயற்ச்சியால் தூய்மை கரையாகட்டும்.


3 comments:

  1. நம் நகரை தூய்மை ஆக்க முயற்சிசிகள் மேற்கொண்டு இருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மனமார்ந்த நன்றி....நம் நகர் தூய்மை அடைவதற்கு பொதுமக்கள் ஆகிய நாமும் முழு ஒத்துழைப்பு கொடுக்க "குப்பை இல்லா நகரை உருவாக்குவோம்...சுகாதாரமான வாழ்க்கை வாழ்வோம்"

    ReplyDelete
  2. நம் கீழக்கரையை தூய்மையாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு இருக்கும் நல் உள்ளம் கொண்டவர்களுக்கும்,நகராட்சி நிர்வாகத்திற்கும்,நம் கீழை செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டு இருக்கும் கீழை இளையவனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. Really gud news ,Thanks for your gud effort for kilakarai welfare. update news regularly Mr. sali hussain

    ReplyDelete