தேடல் தொடங்கியதே..

Monday 2 January 2012

கீழக்கரையில் 'கிழக்கு முஸ்லீம் டிரஸ்ட்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை உதயம்

கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த, சமூக நலனில் பேராவல் கொண்ட நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து  'கிழக்கு முஸ்லிம் டிரஸ்ட்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை துவங்கியுள்ளனர். இந்த அறக்கட்டளையின் திறப்பு விழா இன்று (01.01.2012) இரவு 8.30 மணியளவில் கிழக்கு தெருவிலுள்ள மௌலானா காம்ப்ளக்ஸில் சிறப்பாக நடைபெற்றது. 

 
இவ்விழாவில் கிழக்கு முஸ்லிம் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரையற்றினார். கிழக்கு தெரு முஸ்லீம் ஜமாஅத் முக்கியஸ்தர் சாதிக் காக்கா அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கீழக்கரை அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள், அனைத்து சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த அறக்கட்டளைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் ஆஷிக் காக்கா அவர்கள் கூறும் போது, "நமது கீழக்கரை நகரில் எத்தனையோ அறக்கட்டளைகள் சிறப்பாக செயல்பட்டாலும் கூட, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே தான் எங்களுடைய நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'மருத்துவ சேவையை' முதன்மை நோக்கமாக முன்னிறுத்தி ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரியும் நல்ல நோக்கில் இந்த அறக்கட்டளையை துவங்கியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு மாத காலத்தில் அனைத்து மக்களின் நலனுக்காக 'ஆம்புலன்ஸ் சேவையை துவங்க உள்ளோம். இனி வரும் காலங்களில் இன்னும் பல நல்ல திட்டங்களை எங்கள் அறக்கட்டளை மூலம் செயல்படுத்த இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அறக்கட்டளை தலைவர் ஆஷிக் அவர்கள்
இந்த துடிப்பான கிழக்கு தெரு  இளைய தலைமுறையின் 'கிழக்கு முஸ்லீம் அறக்கட்டளை' மென் மேலும் வளர கீழை இளையவனின் செய்திகள் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

3 comments:

  1. மாஷா அல்லாஹ்.....கிழக்கு முஸ்லிம் அறக்கட்டளைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...
    இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் மருத்துவ உதவிகள் செய்வது என்று அறக்கட்டளயின் தலைவர் ஆஷிக் காக்கா அவர்கள்
    கூறி இருக்கிறார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...மேலும் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் இன்னும் பல நலத்திட்ட உதவிகள் இந்த அறக்கட்டளை மூலம் செயல் படுத்த உள்ளோம் என்ற செய்திகள் நமது ஊர் மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.....நமது ஊரில் எதனையோ சமூக நல அமைப்புக்கள் மூலம் நல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.ஆனால் மருத்துவ உதவிகென்று இவர்கள் எடுத்து இருக்கும் முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்..

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், கிழக்குத்தெரு சகோதரர்கள் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதை தம்பி ஆஷிக் தலைமையில் உருவாகி உள்ள கிழக்கு முஸ்லிம் அறக்கட்டளை நிரூபித்துள்ளது.

    இவர்களுக்கு முன்பாக கிழக்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரிலும், கிழக்குத் தெரு ஜகாஅத் அறக்கட்டளை என்ற பெயரிலும் உருவாக்கி, வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, சிறு தொழில் முனைவோருக்கு உதவுவது என செய்து வருகிறார்கள்.
    ாட்
    அவ்வாறே கீழக்கரை மக்களின் மேம்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் கே.ஈ.சி.டியிலும் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர்களின் பங்களிப்பு மிக அதிகம்.

    அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் வழங்கட்டுமாக!

    ReplyDelete
  3. ASSALAMU ALAIKUM,
    நல்ல பணி..முயற்சி தொடரட்டும்,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete